Tamil Quran | குர்ஆனைப் படியுங்கள்

Chapter 94 (Sura 94)
1; நாம், உம் இதயத்தை உமக்காக விரிவாக்கவில்லையா?
2; மேலும், நாம் உம்மை விட்டும் உம் சுமையை இறக்கினோம்.
3; அது உம் முதுகை முறித்துக் கொண்டுடிருந்தது.
4; மேலும், நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம்.
5; ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
6; நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
7; எனவே, (வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் (இறைவழியிலும், வணக்கத்திலும்) முயல்வீராக.
8; மேலும், முழு மனத்துடன் உம் இறைவன் பால் சார்ந்து விடுவீராக.

Pages ( 94 of 114 ): « Previous1 ... 9293 94 9596 ... 114Next »