Tamil Quran | குர்ஆனைப் படியுங்கள்

Chapter 101 (Sura 101)
1; திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி).
2; திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன?
3; திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன வென்று உமக்கு எது அறிவித்தது?
4; அந்நாளில் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள்.
5; மேலும், மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும்.
6; எனவே, (அந்நாளில்) எவருடைய (நன்மையின்) நிறை கனத்ததோ-
7; அவர் திருப்தி பொருந்திய வாழ்வில் இருப்பார்.
8; ஆனால் எவனுடைய (நன்மையின்) நிறை இலேசாக இருக்கிறதோ-
9; அவன் தங்குமிடம் “ஹாவியா” தான்.
10; இன்னும் (´ஹாவியா´) என்ன என்று உமக்கு அறிவித்தது எது?
11; அது சுட்டெரிக்கும் (நரகத்தின்) தீக்கிடங்காகும்.

Pages ( 101 of 114 ): « Previous1 ... 99100 101 102103 ... 114Next »